இன்று குழந்தைகளுக்கான அறிவுறுத்தல் ஊடகவியலாளர் சந்திப்பை நோர்வேயின் பிரதமர் நடாத்தியிருந்தார்.
இதில் கூறப்பட்டுள்ளதாவது தேசிய இடர்காரணமாக பாடசாலைகளுக்கு தற்காலிகமாக விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் உல்லாசத்திற்கான விடுமுறையல்ல குழந்தைகள் எல்லோரும் பாடசாலையால் வழங்கப்படுகின்ற இலத்திரனியல் வழியிலான பாடங்களை பொறுப்புணர்வோடு கற்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு
இச்சந்திப்பில் குழந்தைகளின் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது அதில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
பாடசாலை கூடுதலாக விடுமுறை விடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் விடுமுறைக்காலங்களில் விளையாடுகின்ற சிறுவர்கள் குறைந்த எண்ணிக்கை (1/2)நண்பர்களோடு விளையாடவேண்டுமென்றும் கைகளை அடிக்கடி கழுவவேண்டுமென்றும் சத்துள்ள சாப்பாடுகளை சாப்பிடவேண்டுமென்றும் சிறுவர்களுக்கு முக்கியமா அறிவுறுத்தப்பட்டுள்ளது.