சீனத்தயாரிப்பு கைத்தொலைபேசிகளை வைத்திருப்பவர்கள், மிகவும் அவதானமாக இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் தயாரிப்புக்களில், குறிப்பாக “Xiaomi” போன்ற நிறுவனங்களின் தயாரிப்பில் வெளிவரும் கைத்தொலைபேசிகளின் இயங்குதளங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் வேவுபார்க்கும் செயலிகள் மூலமாக, பாவனையாளர்கள் உளவு பார்க்கப்படுவதாக “Reuters” நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, சீனத்து தயாரிப்பில் வரும் கைத்தொலைபேசிகளை பாவிப்பதை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 5G அலைக்கற்றை தொழிநுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அப்போது முன்னணியில் திகழ்ந்த சீனாவின் “Huawei” நிறுவனத்தின் தயாரிப்புக்களில் இவ்வாறான வேவுபார்க்கும் செயலிகள் இருப்பதாக சொல்லப்பட்டு அமெரிக்காவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் அந்நிறுவனத்தின் தயாரிப்புக்கள் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.