சீனர்களிடம் இருந்து நாட்டை காக்க முன்வருமாறு மகாசங்கம், முப்படைகளுக்கு அழைப்பு!

You are currently viewing சீனர்களிடம் இருந்து நாட்டை காக்க முன்வருமாறு மகாசங்கம், முப்படைகளுக்கு அழைப்பு!

சீனர்களின் செயற்பாடுகளை பாதுகாக்கவே அரசாங்கம் முன்னின்று செயற்படுகிறது. எனவே தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்வருமாறு மகா சங்கத்தினருக்கும் பாதுகாப்புபடை வீரர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

“ திஸ்ஸமகாராம வாவி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த சீன பிரஜைகள் அணிந்திருந்தது இராணுவ சீருடை அல்ல என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகின்றார். நாட்டு மக்கள் பார்வையற்றவர்கள் என்ற எண்ணத்திலா அவர் இவ்வாறு கூறுகின்றார்?

வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்களிலும், சில காவல் பணிபுரியும் தொழிலாளர்களும் இவ்வாறான ஆடைகளை அணிவதாகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். எந்த பகுதிகளில் அவர் இதனை அவதானித்துள்ளார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பொய் கூறி மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றோம். திஸ்ஸமகாராம வாவியில் இடம்பெறும் அபிவிருத்தி பணிகள் முற்றிலும் தொல்பொருளியல் கட்டளை சட்டத்திற்கு முரணானவையாகும். தொல்பொருள் முக்கியத்துவம் உடைய இடங்களில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனை யாரிடம் சென்று முறையிடுவது? காரணம் அரசாங்கம் சீனர்களின் நடவடிக்கைகளை பாதுகாப்பதிலேயே முன்னின்று செயற்படுகிறது.

எனவே தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முன்வருமாறு மகா சங்கத்தினருக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் அழைப்பு விடுகின்றோம். இந்த விடயத்தில் தலையிட்டு எமது உரிமைகளை பாதுகாப்போம் என்று வலியுறுத்துகின்றோம் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply