கே,ஆர்,ஏ கால்வாய் திட்டம், சீனாவிற்கு, ராணுவ ரீதியாகவும் மூலோபாய ரீதியிலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாம். இதன் மூலம், சீனக் கடற்படை தென் சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் புதிதாக கட்டப்பட்ட தளங்களுக்கு இடையில் மலாக்கா ஜலசந்திக்கு ஒரு நேரிடையாக செல்லும் புறவழிச்சாலையை கட்ட திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில்,தாய்லாந்து வியாழக்கிழமை சீனாவின் கேஆர்ஏ கால்வாய் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.இந்த திட்டத்தின் கீழ்,மலாக்கா ஜலசந்திக்கு ஒரு நேரிடையாக செல்லும் புறவழிச்சாலையை கட்ட திட்டமிட்டிருந்தது.
சீனா திட்டமிட்டுள்ள 120 கிலோமீட்டர் மெகா கால்வாய் திட்டத்தினால்,தென்கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் சுதந்திரம் பாதிக்கப்படும்,சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என தாய்லாந்து எதிர் கட்சியான பியூ தாய் கட்சி மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து,இந்த திட்டத்தை தாய்லாந்து ரத்து செய்தது.
மேலும், சீனாவிடமிருந்து 724 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு யுவான்-க்ளாஸ் S26T நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதையும் தாய்லாந்து ஒத்தி வைத்துள்ளது.