இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கொரோனா தொற்றைக் கண்டறியும் விரைவு பரிசோதனை கருவிகள், மருந்துகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை சீனாவில் இருந்து கொண்டு வர இந்திய மத்திய அரசு முடிவு செய்தது.
அதற்காக டெல்லியில் இருந்து “Air India B-787” விமானம் சீனாவின் குவாங்சொய் மாகாணத்துக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில், 3 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டுள்ளதாக இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.