சீனாவில் செவ்வாயன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இணைய இணைப்புகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 90.4 கோடியை (904 Million) எட்டியுள்ளது, இது 2018 ல் இருந்து 7.50 கோடியால் அதிகரித்துள்ளது.
சீனாவில் இணைய வசதி 64.5 விழுக்காட்டை எட்டியுள்ளது, இது 2018 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து இது, 4.9 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சீனா இணையவலைய தகவல் மையம் (CLINIC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டர், முகநூல் மற்றும் கூகிள் போன்ற உலகளாவிய சமூக ஊடக தளங்கள் சீனாவில் தடைசெய்யப்பட்டாலும், உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்த டுவிட்டருக்கு இணையான வெய்போ(VEYPO) போன்ற இணைய ஊடக தளங்களில் சீனாவும் அதிக மேற்பார்வை செய்கின்றது.
சீனாவில் கைத தொலைபேசிகள் மூலம் இணையத்தை அணுகும் மக்களின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 7.99 கோடியாக அதிகரித்து உள்ளது. 2020 மார்ச் மாதத்தில் 8.97 கோடியாக அதிகரித்துள்ளது, இது மொத்த எண்ணிக்கையில் 99.3 விழுக்காடாக உள்ளது என்று அரசு நடத்தும் சின்ஹுவா சீனா (Xinhua China) இணையவலைய தகவல் மைய அறிக்கையை மேற்கோளிட்டு தகவல் வெலியிட்டுள்ளது.
மார்ச் மாத நிலவரப்படி, நாட்டின் கிராமப்புறங்களில் இணைய பயனர்கள் 25.5 கோடியை எட்டி உள்ளனர். இது மக்கள் தொகையில் 28.2 விழுக்காடை எட்டியுள்ளது, இது 2018 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 33 கோடியாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் நகர்ப்புற பயனர்களின் எண்ணிக்கை 4.2 கோடியாக அதிகரித்துள்ளது 2018 முதல் 64. 9 கோடிவரை, மொத்தத்தில் 71.8 விழுக்காடு பேர் இணைய வசதியை பெற்றுள்ளனர்.
கணினி, மடி கணினி , தொலைக்காட்சி மற்றும் tablet மூலம் சீன இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை முறையே மார்ச் மாதத்திற்குள் 42.7 விழுக்காடு, 35.1 விழுக்காடு, 32 சவிழுக்காடு மற்றும் 29 விழுக்காடு ஆக இருந்துள்ளது.