அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், சீனாவில் கடந்த ஒருவாரத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.
மேலும், கொரேனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்ற உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பின் மையமாக திகழ்ந்த சீனா ஏறக்குறைய பாதிப்பிலிருந்து முற்றிலுமாக மீண்டுள்ளது. கடந்த 10 நாட்களில் கொரோனாவால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே தொடரும் நிலையில், இந்த 10 நாளில் சீனாவில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்பு!
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்ற உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே, குணமடைந்தவர்களும் சமூக விலகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.