சீனாவில் மருத்துவமனைகளும் தகன இல்லங்களும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், மிக மோசமான சூழலை அந்த நாடு எதிர்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களின் எதிர்ப்பு காரணமாக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை சீனா நிவார்கள் தளர்த்தியுள்ள நிலையில், கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் 90 நாட்களில் 800 மில்லியன் பேர்களுக்கு பதிப்பு உறுதி செய்யப்படலாம் என்ற அதிரவைக்கும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், சீனாவில் மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையால் ஸ்தம்பித்துப் போயுள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தரையில் படுத்தபடி சிகிச்சை பெறும் நிலையும், தகன இல்லங்களில் சடலங்கள் குவிகிறது எனவும் தெரியவந்துள்ளது.
வூஹான் நகரில் முதன்முறையாக கொரோனா பதிப்பால் ஆயிரக்கணக்கானோர் இறந்த நிலையிலும் இதே பீதியை ஏற்படுத்தியிருந்தது. தற்போதைய மோசமான நிலையை கருத்தில் கொண்டால், சீனாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில்(1.4 பில்லியன்) 60% பேர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும், இது கண்டிப்பாக கவலைக்குரிய விடயம் எனவும் நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும், எதிர்வரும் மாதங்களில் 2.1 மில்லியன் சீன மக்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைவார்கள் எனவும், நாளுக்கு 7,000 பேர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பு கூறியுள்ள தகவலை ஒப்பிட்டு, நிபுணர்கள் இறப்பு எண்ணிக்கையை கணித்துள்ளனர்.
ஆனால், சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான Guangzhou-வில் மட்டும் 50,000 பேர்கள் அறிகுறிகளுடன் பதிவு செய்துள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் காய்ச்சலுக்கான சுகாதார மையங்களை 94ல் இருது 1,263 என அதிகரித்துள்ளனர்.
இதனிடையே, சீனாவில் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் 16 பேர்களுக்கு நோயை பரப்புவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த குளிர்காலத்தில் ஒவ்வொரு மூன்று நாளுக்கும் ஒருமுறை அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததாக கண்டறியப்பட்டது. ஆனால் சீனவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அப்படியான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்