சீனாவின் கியூசோ மாகாணத்தில் உள்ள குவாங்லாங் என்ற சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் வழக்கம் போல் ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கிய பணியாளர்கள் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் இருவர் நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியிருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இங்குள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்கனவே பலமுறை இதேபோன்று வெடி விபத்துக்கள் ஏற்பட்டு அதனால் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சுரங்கத்திலும் விபத்து நிகழ்ந்தது.
347 பணியாளர்கள் வேலையில் மும்முரமாக இருந்த போது வெள்ளம் அவர்களை அடித்துச் சென்றது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். 300-க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக இறங்கி உள்ளனர்.