சீனாவில் பரவும் புதியவகை வைரஸ் கிருமி! தனிமைப்படுத்தப்படும் “Wuhan” நகரம்!!

You are currently viewing சீனாவில் பரவும் புதியவகை வைரஸ் கிருமி! தனிமைப்படுத்தப்படும் “Wuhan” நகரம்!!

சீனாவின் “Wuhan” நகரிலிருந்து பரவியதாக சந்தேகிக்கப்படும் புதிய வகை வைரஸ் கிருமியின் தொற்றுதலால் இதுவரை 17 பேர் மரணமாகியுள்ளதோடு, 440 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

பிரபல மீன் சந்தையிலிருந்து தொற்றியதாக தெரிவிக்கப்படும் இப்புதிய வகை வைரஸ் தொற்றுதலினால் சுவாசவழி பாதிப்படைவதோடு, காய்ச்சல், இருமல், தொண்டைப்புண், சுவாசத்தடை ஏற்படுவதோடு நுரையீரல் அழற்சியும் ஏற்பட்டு உயிராபத்தும் ஏற்படலாமென தெரிகிறது.

சுமார் 11 மில்லியன் மக்கள் வசிக்கக்கூடிய சீனாவின் பெருநகரங்களில் ஒன்றான “Wuhan” நகரத்தில் இக்கிருமியின் பாதிப்பு அதிகமாக இருப்பதால், இந்நகரத்திலிருந்து யாரும் வெளியேறவோ அல்லது நகரத்திற்குள் உள்நுழைவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, நகரத்திற்கான அனைத்து போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதுவரையிலும், சீனா, ஜப்பான், தாய்லாந்து, தென்-கொரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே வைரஸ்பா தொற்திறால்க்க பாதிக்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், அமெரிக்காவிலும் ஒருவருக்கு இவ்வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை அடையாளம் காணப்படாத இந்த புதிய வகை வைரஸ் இன்னமும் ஐரோப்பாவில் அவதானிக்கப்படவில்லை என்றாலும், அனைத்து மக்களும் மிகமிக அவதானமாக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக செல்லப்பிராணிகள் உட்பட விலங்கினங்களால் காவிச்செல்லப்படக்கூடிய இந்த வைரஸ், விலங்கினங்களின் உமிழ்நீரின் மூலம் இலகுவாக பரவும் எனவும் சொல்லப்படுகிறது.

மேற்சொன்ன உடல் அறிகுறிகள் அவதானிக்கப்பட்டால் தாமதிக்காது உடனடியாக மருத்துவ உதவிகளை நாடும்படியும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

பகிர்ந்துகொள்ள