சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 2,912 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,912 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,026 ஆக உயர்ந்துள்ளது. 42 புதிய இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
அதேபோல் உலகம் முழுவதும் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,057 ஆக அதிகரித்துள்ளது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,081 ஆக அதிகரித்துள்ளது.