பிளவுபடுத்தி விளையாடும் சீனாவுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும் என மேற்கத்திய நாடுகளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். Global தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஒளிப்பரப்பான நேர்காணலில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மேற்கத்திய நாடுகள் சீனாவில் பொருளாதார வாய்ப்புகளை அணுகுவதற்கு போட்டியிடுகின்றன.
இதற்கிடையில், மேற்கத்திய நாடுகளை ஒன்றுக்கொன்று எதிராக பிளவுப்படுத்தி சீனா விளையாடுகிறது.
சீனா, அவ்வப்போது, மிகவும் புத்திசாலித்தனமாக ஒரு திறந்த சந்தையில், போட்டித்தன்மையுடன் நம்முடன் விளையாடி வருகிறது.
நாம் சீனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டு ஒற்றுமையாக நின்று சிறப்பாக பணியாற்றிட வேண்டும்.
அப்படி செய்ததால், சீனாவால் வெவ்வேறு கோணங்களில் விளையாடி நம்மை பிரிக்க முடியாது என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.