தாய்வானையும் உள்ளடக்கிய “ஒரே சீனா” என்ற, சீனாவின் நிலைப்பாட்டுக்கு ரஷ்யா முழுஆதரவளிப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மற்றும் சீன அதிபர்களுக்கிடையே நடந்த தொலைவழி சந்திப்பில், தாய்வான்விடயத்தில் அமெரிக்கா தலையிடாமல் இருப்பதே அமெரிக்காவுக்கு உசிதமானதுஎனவும், தாய்வான் தன்னை தனிநாடாக பிரகடனப்படுத்தினால் தாய்வான் மீதுஉடனடியான படையெடுப்பை சீனா மேற்கொள்ளும் எனவும் சீன அதிபர் அமெரிக்கஅதிபரிடம் கடுமையாக தெரிவித்துள்ளதாகவும் மேலும் அறிய முடிகிறது.
உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ நடவடிக்கையானது, தாய்வான் மீதான சீனாவின்இராணுவ நடவடிக்கையொன்றுக்கு உந்துதலாக அமையும் என்ற கோணத்தில்இதுகுறித்து சீன அதிபரோடு அமெரிக்க அதிபர் விவாதித்தபோதே மேற்கண்டவாறு சீனஅதிபர் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் விடயத்தில் ரஷ்யா மேற்குலகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டதைதொடர்ந்து சீனாவுடனான தனது அரசியல், பொருளாதார மற்றும் இராணுவஒத்துழைப்புக்களை மேலும் இறுக்கமாக்கியுள்ள ரஷ்யா, தாய்வானையும் உள்ளடக்கிய“ஒரே சீனா” என்ற சீன அதிபரின் கொள்கைக்கு முழு ஆதரவை வழங்குவதாகஅறிவித்துள்ளதையானது சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தவிரவும், சமீபத்தில் புருஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற “நேட்டோ” உச்சி மாநாட்டில், சீனா அமெரிக்காவுக்கும், மேற்குலகத்துக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது என“நேட்டோ” கூட்டமைப்பு பகிரங்க அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தமையும், “நேட்டோ” வின் வரலாற்றில் சீனா பற்றிய காட்டமான அறிக்கை வெளியிடப்பட்டமை இதுவே முதல்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.