கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவுடனான எல்லையை ஹாங்காங் மூடியுள்ளது.
உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் இந்த வேளையில் பல்வேறு நாடுகளும் சீன நாட்டவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், ஹாங்காங்கையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தன் நாட்டின் சீன எல்லைப்பகுதியை மூடுவதாக தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.
ஹாங்காங்கில் தற்போது வரை 16 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 39 வயதான நபர் ஒருவர் இறந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.