தென்மேற்கு சீனாவின் (China) திபெத் (Tibet) பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, 188 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
திபெத்தில் உள்ள நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சுமார் 1,500 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சீன அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
7.1 ரிக்டர் அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளதோடு, அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.