https://www.youtube.com/watch?v=4PHxZrgUDYI
தமிழர்கள் கடந்த 74 ஆண்டுகளாக அரசியல் தீர்வுகளை கேட்டு வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு இனப் போரின்போது, 146,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர் .
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள், பொறுப்பு மற்றும் நீதியைக் காண கடந்த 1600 வது நாளாக,ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு என்று,தொடர்ந்து போராடி வருகிறோம்.
ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் தமிழர்களுக்கான நீதியை சீனா எதிர்ப்பதால், சீனா தமிழர்களின் நண்பர் அல்ல.
எனவே, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் நாங்கள் சீனாவை தமிழ் தாயகத்தை விட்டு வெளியேறச் சொல்கிறோம்.
எனவே, மனித உரிமைகளிள் அக்கறை கொண்ட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையில் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த தாமதிக்காமல் செயல்ப்பட வேண்டும்.
நன்றி
கோ.ராஜ்குமார்
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்.