கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சீனா நகரங்களில் இருந்து சவுதி அரேபியாவுக்குள் நுழைய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சீனா நகரங்களில் இருந்து சவுதி அரேபியாவுக்குள் நுழைய பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்து உள்ளது. சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்திருக்கும் நாடுகளில் 16-வதாக சவுதி அரேபியா இணைந்துள்ளது.
சவுதி அரேபியா தனது குடிமக்களுக்கு சீனாவுக்குச் செல்வதைத் தடைசெய்ததுடன், தடையை மீறிய எவராது அதிகாரிகளிடம் சிக்கினால், அவர்களின் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.மேலும் ஆசிய நாடுகளுக்கு செல்லும் குடிமக்களுக்கு பயண ஆவணங்கள் குறித்த ஒழுங்குமுறை விதிகள் அமுல்படுத்தப்படும் என்று சவுதி அரேபியாவின் குடியுரிமைத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சவுதி அரேபியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை, ஆனால் வுகானைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பம் உள்பட ஐந்து பேர் அண்டை நாடான ஐக்கிய அமீரகத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பதினைந்து நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சில வகையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.