அமெரிக்க ராணுவ படையின் பெண் வீரர் ஒருவரே சீனா, உகானில் கொரோனாவை பரப்பியவர் என அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் சீனாவின், உகான் நகரில் உள்ள நுண்ணுயிரி ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என்று பல ஆய்வாளர்கள் உள்பட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால், சீனா இதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இதனை அடுத்து வைரஸ் பரவல் குறித்து சீனாவில் சர்வதேச குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், அமெரிக்க இதுபற்றி விசாரிக்க தொடங்கிவிட்டதாக தெரிவித்தது.
சீனாவில் இருந்துதான் வைரஸ் பரவியது என்று கண்டறியப்பட்டால், சீனா அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், ஐரோப்பிய கூட்டமைப்பும் சீனாவிற்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் சீனா சர்வதேச விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம். சர்வதேச விசாரணை அதிகாரிகளை நாங்கள் எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க ராணுவ படையின் பெண் வீரர் ஒருவரே சீனா உகானில் கொரோனாவை பரப்பியவர் என அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வருகிறது. இதனால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மாட்ஜே பெனாஸி (Maatje Benassi) என்ற அமெரிக்க ராணுவ ரிசர்வ் படை (US Army reservist) வீரர் முதன் முறையாக மனந்திறந்துள்ளார்.
சீனாவின் சமூக வலைப்பக்கங்களில் தமது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டு, தாம் உலகின் முதல் கொரோனா நோயாளி எனவும் பரப்பப்படுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.ஆனால் கொரோனா அறிகுறிகளோ, அல்லது கொரோனா சோதனைகளில் இதுவரை தமக்கு பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்படவும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க அரசு திட்டமிட்டே, கடந்த அக்டோபரில் கொரோனாவை உகானில் பரப்பியதாகவும்,அப்போது உகானில் நடத்தப்பட்ட ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு பின்னரே, கொரோனா பரவியதாகவும் சீனாவில் தகவல் பரப்பப்படுகிறது.
மார்ச் துவக்கத்தில் இதுபோன்ற தகவல் பரவியதும், தமக்கும் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக Benassi தெரிவித்துள்ளார். கொரோனா பரவத் தொடங்கிய துவக்க காலகட்டத்திலேயே, இது திட்டமிடப்பட்ட உயிரியல் ஆயுதம் எனவும், அமெரிக்காவுக்கு இதில் கட்டாயம் பங்கிருக்கும் எனவும் தகவல் பரப்பப்பட்டது.
தற்போது அமெரிக்க ராணுவ படை ஊழியர் மீது கவனம் திருப்பப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உகானில் ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அமெரிக்கா சார்பில் மிதி வண்டி போட்டியில் கலந்து கொண்ட Benassi, கடைசி கட்டத்தில் விபத்துக்குள்ளாகி போட்டியில் இருந்து விலக நேர்ந்துள்ளது.
அந்த விபத்தில் அவருக்கு விலா எலும்பு உடைந்து கொஞ்சம் ஆபத்தான நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார். Benassi மீது சீனா உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்கள் கவனம் செலுத்த காரணமே அவர் ஒரு அமெரிக்கர் எனவும், 59 வயதான அவர், தனது YouTube பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.