அமெரிக்கா ஒரு புதிய பனிப்போரை நோக்கி சீனாவை தள்ளுகிறது என்று சீனாவின் வெளியுறவு மந்திரி “Wang Yi” கூறியுள்ளார். “அமெரிக்காவில் சில அரசியல் சக்திகள் எங்கள் இரு நாடுகளையும் ஒரு புதிய பனிப்போரின் விளிம்பிற்குத் தள்ளுகின்றன என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்று Wang Yi இன்று ஞாயிறு தெரிவித்துள்ளார்.
கொரோனா நெருக்கடி காரணமாக வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பதட்டங்கள் இப்போது மேலும் தீவிரமடைந்துள்ளன. ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்பு சட்டங்களுக்கான திட்டம், போரின் வெப்பநிலையை மேலும் உயர்த்தியுள்ளது.
அமெரிக்காவில் எந்த அரசியல் சக்திகள் இதற்கு காரணம் என்பதை Wang Yi கூற மறுத்துள்ளார். இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump சமீப காலமாக, உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என்று தொடர்ந்தும் குற்றம் சாட்டி வருகின்றார்.
“கொரோனா வைரஸால் ஏற்படும் அழிவுக்கும் மேலாக, அமெரிக்காவில் ஒரு அரசியல் வைரசும் பரவி வருகின்றது” என்று Wang Yi மேலும் கூறியுள்ளார்.
மேலதிக தகவல்: VG