பேர்கனில் உள்ள ஹாக்லேன்ட்(Haukeland) பல்கலைக்கழக மருத்துவமனையின் இரத்த வங்கி கோவிட் 19 என கண்டறியப்பட்டு மீட்கப்பட்டவர்களிடம் இரத்த தானம் செய்யும் படி அழைக்கிறது என்று பேர்கன் Tidende தெரிவித்துள்ளது.
மேலும் ஒஸ்லோவிலுள்ள இரத்த வங்கியும் அவ்வாறே செய்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.
மற்றும் இந்த இரத்ததானம் செய்பவர்கள் போதுமான எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி இருக்கிறார்களா என்பதனை நாங்கள் சோதிப்போம். அது அவர்களிடம் இருந்தால் , நாங்கள் அவர்களின் பிளாஸ்மாவை(Plasmaet) அறுவடை செய்கிறோம் என்று ஹாக்லன்ட் மருத்துவமனையின் துறைத் தலைவர் ஐனார் க்ளோபோ கிறிஸ்டோபர்சன் செய்யாளர்களிடம் கூறி இருக்கின்றார்.
இது பொது சுகாதார நிறுவனத்தின் அனுசரனையுடன் மற்றும் அனைத்து சுகாதார பிராந்தியங்களுடனும் இணைந்து நடத்தப்படுகிறது.
மேலும் 180 பேரிடம் சோதனை செய்யப்படடுள்ளது. இவர்களின் இரத்தத்தில் நோய் தடுப்பு குணம் (Antibiotika) இருந்தால் இவர்களிடமிருந்து இரத்த அணுக்களை எடுத்து குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய நபர்கள் அல்லது ஆபத்தில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் என்று கருதப்படுகிறது
இந்த முடிவைப் பெறுவது சில மாதங்கள் ஆகும் என்று கிறிஸ்டோபர்சன் கூறுகிறார்.