சுகாதாரத்துறையில் பணிபுரியக்கூடிய தகைமை பெற்ற அனைவரும், தாமாகவே முன்வந்து தங்களை பதிவு செய்யுமாறு ஒஸ்லோ நகரசபையின் தலைவர் “Raymond Johansan” வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவசரகால நிலைமைகளின்போது, பொதுப்பணிகளுக்காக பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்படும்போது, அந்தந்த துறைகளில் பணிபுரியக்கூடியளவுக்கு தகைமைகள் உள்ளவர்கள், போர்க்கால அடிப்படையில் பணிகளுக்கு அழைத்துக்கொள்ளப்படும் அடிப்படையிலேயே, ஒஸ்லோ நகரசபையின் தலைவர் ஐந்தே வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சுகாதாரத்துறையில் கல்விகற்றுவரும் மாணவர்களையும், இத்துறையில் பணியாற்றக்கூடிய குறைந்தபட்ச பாண்டித்தியம் பெற்றவர்களையும் அவசர சுகாதார சேவைகளுக்காக அழைத்திருக்கும் நகரசபையின் தலைவர், அனைவருக்கும் விதிகளின்படி வேதனம் வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
செய்தி மேம்பாடு:
ஒஸ்லோ நகரசபையின் தலைவரின் வேண்டுகோளையடுத்து இதுவரை 1800 பேர் தங்களை அவசர சுகாதார சேவைகளில் ஈடுபடுத்திக்கொள்வதற்காக பதிவு செய்துள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.