சுண்டிக்குளம் பகுதியில் கடலில் மறைத்து வைக்கப்பட்ட கடற்புலிகளின் தற்கொடைத் தாக்குதல் படகு நேற்று இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட படகை வெட்டிச் சோதனையிடப்பட்டபோது படகில் தற்கொலைத் தாக்குதலுக்கான வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரும் பொலிஸாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![சுண்டிக்குளத்தில் கரும்புலிப் படகு! 1](https://www.seithy.com/siteadmin/upload/sucide-boat-010322-seithy%20(2).jpg)