சுதந்திரபுரம் பகுதியில் வீட்டு கிணற்றில் இளைஞனின் சடலம் மீட்பு !

You are currently viewing சுதந்திரபுரம் பகுதியில் வீட்டு கிணற்றில் இளைஞனின் சடலம் மீட்பு !

முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் உயிரிழந்தவரின் வீட்டு கிணற்றில் இருந்து நேற்றையதினம்(13.01.2025) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த 11.01.2025 அன்று காணாமல் போயுள்ளார்.

அதன் பின்னர் அவரை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்ட நிலையிலும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறான பின்னணியில் சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply