சுவிசில் ஏற்பட்டுள்ள புலனாய்வு சதி தேசியத்தலைவரின் சித்தாத்தத்தால் முறியடிக்கப்படும்!

You are currently viewing சுவிசில் ஏற்பட்டுள்ள புலனாய்வு சதி தேசியத்தலைவரின் சித்தாத்தத்தால் முறியடிக்கப்படும்!

தமிழீழ விடுதலைப்போராட்டம் பல துரோகங்களையும், சவால்களையும் நேரெதிரே சந்தித்து அதற்கு முகங்கொடுத்து போராடியே மீண்டு வந்தது . தேசியத்தலைவரிடம் இயல்பாகவே நிறைந்திருந்த புலனாய்வுப் பார்வையும், தீர்க்க தரிசனமும் இன்றுவரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியக் கட்டமைப்புகளைக் காப்பாற்றி வருகிறது . அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் உண்மைக்குப் புறம்பான , எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைக்கக்கூடிய புலனாய்வுச் சதிகள் இன்று சுவிட்சர்லாந்து தேசத்திலுள்ள தேசியக்கட்டமைப்புகளைக் இலக்கு வைத்து பின்னப் பட்டுள்ளன. இதன் நோக்கம் வீரியம் மிக்க சுவிஸ் கிளையைக் கைப்பற்றி அதன்பின்னர் நீர்த்துப் போகச் செய்து அழிப்பதாகும். 30 ஆண்டுகளிற்கு மேலான வரலாற்றைக் கொண்ட செயற்திறன் கொண்ட கிளையை அழித்து விட்டால், அனைத்துலக ரீதியாக 14 நாடுகள் ஒன்றிணைந்து தேசியத்தலைவர் பிரபாகரனின் சிந்தனை என்னும் ஒரு நேர்கோட்டில் தமிழீழம் என்ற கோட்பாட்டுடன் பயணிப்பதை நிறுத்தலாம் என இந்திய, சிங்கள புலனாய்வுக்கட்டமைப்புகள் மனப்பால் குடிக்கின்றன. பிரபாரன் சிந்தனை ஒரு one man army என தொடர்ந்தும் நாங்கள் சொல்லி வருகிறோம். இன்று அதற்கான முன்னோட்டத்தை போராளிகளும் செயற்பாட்டாளர்களும், மக்களும், இணைந்து காட்டியுள்ளார்கள். இந்த உலகிலேயே பலம்வாய்ந்த விடுதலைச்சிந்தனையை விதைத்த மேதகு பிரபாகரன் பிள்ளைகள் நாங்கள் . எதை, எவ்வாறு, எப்படி முடிப்பது என்பதை தலைவர் கற்றுத் தந்துள்ளார். துரோகிகளே நீங்கள் படிக்க நிறைய இருக்கிறது .காலம் உங்களை இனங்காட்டிப் பதிந்து வைத்துள்ளது. நீங்கள் யாரும் இனித் தப்பியோட முடியாது. உங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு வெளியேறிச் செல்லுங்கள், இல்லையேல் எமது தேசம் உங்களை வெளியேற்றும். இந்தத் தேசத் துரோகிகளை பாதுகாப்பவர்களே சிந்தியுங்கள் இவ்வளவு காலமும் தேசவிடுதலைக்காக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து நீங்கள் ஆற்றிய பணி மிகவும் பெரியது. போற்றுதற்குரியது. சரியான காலத்தில் முடிவெடுக்கத் தவறும் ஒவ்வொரு கணமும் ஆபத்தானதே. அது எதிரிகளிற்கும், துரோகிகளிற்கும் அவகாசம் கொடுப்பது போலாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக ஒழுங்கு விதிகளை மீறிச் செயற்பட்டவர்களை நாம் அனைவரும் இணைந்து வெளியேற்றி விட்டு தூய்மையான நேர்மையான நிர்வாக ஒழுங்கில் இணைந்து செயற்படுவோம். தேசியத்தலைவரையும், அவரது குடும்பத்தையும் வைத்து என்று காசு சேர்க்க தொடங்கினார்களோ, அன்றே தெரிந்து விட்டது இது ஒரு கயவர் கூட்டணி என்று. தேசியத்தலைவர் அவர்கள் காட்டிய பாதையில் அவருடைய சிந்தனையைப் பின்தொடர்ந்து எமது பயணம் தொடரும் , குறுக்கே எந்தக் கொம்பன் வந்தாலும் அப்புறப்படுத்தி விட்டு தமிழீழம் என்னும் இலக்கை நோக்கி தொடர்ந்து வீறுநடை போடுவோம். *அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி*

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments