சுவிஸில் கொறோனாவைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட விதிமுறைகளை மீறுவதை தடுப்பதற்கு காவல்துறை சோதனைகள், மறைகாணிகளை வைத்து அவதானித்தல் மற்றும் வலவனிலா வானூர்திகள் மூலம் அவதானித்தல் என சனி மற்றும் ஞாயிறும் ஆகிய வார இறுதி நாள்களில் தொடர்ந்தும் கண்காணிப்புகளை நடாத்துவதாக முடிவெடுத்துள்ளது. சனியும், ஞாயிறும் காலநிலை அழகாக இருக்கின்ற போதும் சுவிஸில் மக்கள் விதிமுறைகளை கடைப்பிடிப்பார்களா என்ற கேள்விக்குறியுள்ளதனாலேயே காவல்துறை மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
பொது இடங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக ஏற்கெனவே ஆர்கௌ மாநிலத்தில் மறைகாணிகள் பூட்டப்பட்டுள்ளன.
யூரா மாநிலத்தில் காவல்துறை குதிரைகளில் சென்று கண்காணிப்புகளை மேற்கொள்கின்றனர்.
“காவல்துறையின் பணி வருகின்ற நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் அதிகமாக இருக்கம். மக்களின் பாதுகாப்பே நடுப்புள்ளியில் இருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்..” என பேர்ன் மாநிலத்தைச் சேர்ந்த சுவிஸின் காவல்துறை தலைமை அதிகாரி ஸ்ரெபன் பிலெட்லர் கூறியுள்ளார்.
மொழிபெயர்ப்பு: ர.நிதுர்ஷனா