சுவிசில் நோயத்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளின் தளர்வுகள்!

You are currently viewing சுவிசில் நோயத்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளின் தளர்வுகள்!


சுவிசில்கொறோனா பெருந்தொற்று இறப்புக்களும் மற்றும் புதிதாக நோய்த்தொற்றும் வீழ்சியடைந்திருக்கும் இவ்வேளை பேர்ன் நகரில் 27. 05. 2020 புதன்கிழமை 15.00 மணிமுதல் சுவிற்சர்லாந்து அரசு தமது அடுத்தகொறோனா பெருந்தளர்வு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
 
 
இச் சந்திப்பில் பங்கெடுத்த சுவிஸ் அமைச்சர்கள்:
 

சுவிஸ்அதிபர் திருமதி சிமோனெற்ரா சொமொறுக்கா, சுற்றுச்சூழல்-, போக்குவரத்து-, எரிசக்தி மற்றும் தொலைத்தொடர்பாடல் அமைச்சர்

திரு. அலான் பெர்சே, சுகாதரத்துறை மற்றும் உள்துiறையமைச்சர்

திருமதி. காறின் கெல்லெர்-சுற்ரெர், நீதி மற்றும் காவற்துறைஅமைச்சர்

 
இவ்ஊடகவியலாளர் நேர்காணலை சுவிற்சர்லாந்து நடுவனரசின் துணைத் தலைமையதிகாரியும், சுவிற்சர்லாந்து நடுவனரசின் பேச்சாளருமான திரு. அந்திரே சிமோனாச்சி நெறிப்படுத்தினார்.

 சுவிற்சர்லாந்து நடுவனரசின் முக்கியமுடிவு

சுவிசில் நோயத்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளின் தளர்வுகள்! 1
  1. 2020 முதல் 300 மக்கள் வரை பங்கெடுக்கும் அரசியல், சமயப்-, பண்பாட்டு-, குடும்ப-, பொது மற்றும் தனியார்நிகழ்வுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகின்றது. இதன்போது உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடவடிக்கைகள் கைக்கொள்ளப்படவேண்டும். நிகழ்விற்கேற்ப உரிய காப்பமைவு (ஊழஎனை-19 pசழவநஉவழைn உழnஉநிவ) நிகழ்வுஏற்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்டு, அதற்கு ஒரு பொறுப்பாளர் தெரிவுசெய்யப்படவேண்டும். பொறுப்பேற்று ஒப்பமிடுபவர் பாதுகாப்பு நடவடிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த தனது ஒப்பத்தால் காப்புறுதிவழங்க வேண்டும்.
     
     
    ஐவர் தடைநீக்கம்
     
    1000 மக்கள்வரை பங்கெடுக்கும் பெரு நிகழ்வுகளிற்கு வழங்கப்பட்டுள்ளதடை நீக்குவது தொடர்பான முடிவு எதிர்வரும் 24. 06. 2020 அறிவிக்கப்படும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுக்கும் நிகழ்வுகள் தொடர்பான தளர்வு ஆகஸ்ட் இறுதியில் எதிர்பார்க்கப்படுகின்றது.
     
    30 நபர்களுக்கு உட்பட்டு முன்னேற்பாடுகளற்று திடீரென்றும் ஒன்றுகூடலாம். அப்போதும் கொறோனா பெருந்தொற்றினைத் தடுக்கும் சுகாதார நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். 5வர் மட்டுமே ஒன்றாகக்கூடலாம் என்ற தடை நீக்கப்படுகின்றது. 30. 05. 2020 முதல் பொது இடங்களில், சிறுநடை – உலா செல்லும்போது மற்றும் பூங்காக்களில் 30 நபர்கள் வரை ஒன்றுகூடலாம்.
     
     
    பொதுப்போக்குவரத்தும் சுற்றுலாவும்
     
    அதுபோல் அனைத்துப் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா நிறுவனங்களும் 06. 06. 20 முதல் தமது சேவைகளை மீண்டும்வழங்கலாம், தமது நிறுவனங்களைத் திறந்துகொள்ளலாம்.
     
    பெருங் குழுக்களாக மக்கள் உணவகங்களுக்கு வருகை அளித்தால் தொடர்ந்தும் வருகைப்பட்டியலில் தம்மைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். 4வருக்கு உட்பட்டு வருகை அளிப்போர் உணவு விடுதிகளில் தமதுசுயதரவினைப் பதிவுசெய்யத் தேவையில்லை.
     
    மேசைப்பந்தாட்டம் மற்றும் நேரடி இசை நிகழ்வுகள் மீண்டும்நடத்தலாம்.
     
    ஆனால் குழுக்கள் நால்வருக்கு மேற்பட்டால் அவர்கள் வருகைப் பதிவேட்டில் பதியப்பட வேண்டும். இவ்வாறான நிகழ்வுகளில் வருகை அளிப்போர் நகராது ஓரிடத்தில் இருக்க வேண்டும். நள்ளிரவுடன் நிகழ்வுகள் நிறைவுற வேண்டும்.
     
    இவை இரவு விடுதிகளுக்கும், நடன விடுதிகளுக்கும் பொருந்தும். அங்கும் ஆகக்கூடியது 300 மக்கள் சுகாதார நடவடிக்கையினை கைக்கொண்டு ஒன்றுகூடலாம்.
     
     
    சுற்றுலாத்துறைக்கு பச்சைவிளக்கு
     
    மலைகளில் அமைந்திருக்கும் மலையுந்துகளும், கூடாரம் அமைத்து சுற்றுலா செல்லும் பயணிகளும்  06. 06. 2020 முதல்மகிழ்வாக பயணங்களை மேற்கொள்ளலாம்.
     
    நடாக அரங்குகள், திரையரங்குகள், சூதாட்ட விடுதிகளும், சிற்றின்ப – களியாட்ட விடுதிகளும், நீச்சல் தடாகங்களும், பொழுதுபோக்குப் பூங்காக்களும், விலங்குக்காட்சி சாலைகளும், நலவாழ்வு நடுவங்களும், தாவரவியல் பூங்காக்களும், மீளவும் திறந்துகொள்கின்றன.
     
     
    பொதுவிடத்தில் கையொப்பம் சேகரித்தல்
     
    அரசியல் நோக்கில் அல்லது புகார் அளிக்க குடிமக்களின் கையொப்பம் சேகரிக்கும் பணிகள் ஈடுபடுவோர் உரிய காப்பமைவுகளுடன் 01. 06. 2020 முதல் கையொப்ப சேர்க்கையினை மீளத் தொடங்கப்படலாம்.
     
     
    பாடசாலைகள்
     
    இதுவரை திறக்கப்படாத ஏனைய பாடசாலைகளான நடுநிலை, தொழிற்கல்வி மற்றும் உயர் பாடசாலைகள் 06. 06. 2020 முதல் திறக்கப்படும்.
     
    உரியபாதுகாப்புடன் பாடசாலைகளை மீளத்திறக்கும் பொறுப்பு மாநிலங்களிடம் நடுவன் அரசு மீள வழங்குகின்றது.
     
     
    வீட்டில் இருந்து பணிபுரிவோர்
     
    தொடர்ந்தும் வீட்டில் இருந்தபடி பணிபுரிய வாய்பிருப்பின் அதனைத் தொடர சுவிஸ் அரசுமுன்மொழிகின்றது.
     
    நிறுவனங்கள் தமது முடிவினைத் தாமே எட்டலாம். வீடுகளில்இருந்தபடி பணிபுரிவதன் பயன் பொதுப்போக்குவரத்தில் நெரிசல்கள் குறையும். ஆகவே வாய்ப்பிற்கமைய நிறுவனங்கள் வீடுகளில் பணி வழங்கமுடிந்தால் அதனைசுவிஸ் அரசு வரவேற்பதாக அறிவிக்கப்பட்டது.
     
     
    அவசரகாலச் சட்டம் நீக்கப்படுகின்றது!
     
    நோய்த்தொற்றுப் பேரிடர் காரணமாக சுவிஸ் அரசு நடைமுறைப்படுத்தியிருந்த அவசரகாலச் சட்டம் 19. 06. 2020 நள்ளிரவுடன்நிறைவிற்கு வருகின்றது. அனைத்து தளர்வு நடவடிக்கைகளின்போதும் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும்நெறிகள் ஒழுகப்படவேண்டும்.
     
     
    பயணக்கட்டுப்பாடு
     
    பல்வேறுதரப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் 08. 06. 2020 முதல் தளர்த்தப்படும். சுவிற்சர்லாந்தில் இயங்கும் நிறுவனங்கள் துறைசார் வல்லுணர்களை 08. 06. முதல் தொழிலிற்காக மூன்றாம் நாடுகளில் இருந்து பணிக்கு அமர்த்தலாம். இருப்பினும் சுவிசில் ஒரு பணி வெற்றிடம்ஏற்பட்டால், அப்பணியிடம் முதலில் சுவிற்சர்லாந்தில் வாழ்பவருக்கு கிடைக்க முன்னுரிமையினை நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்ற சுவிசின் சட்டமும்மீண்டும் அமுலுக்கு வருகின்றது. 
     
    நோய்த் தொற்று தொடர்ந்தும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பின் கட்டுப்பாடற்ற மக்கள் நகர்வுச் சுதந்திரம் மற்றும் வரையற்ற பயணச் சுதந்திரம் 06. 07. 2020 முதல் அனைத்து செங்கன் ஒப்பந்த நாடுகளுடன் நடைமுறைக்கு வரும்.
     
    வெளிநாடுகளில் இருந்து சூரிச், ஜெனீவா, பாசெல் வருகை அளிக்கும் பயணிகள் விமானச் சேவைக்கு இதுவரை விதிக்கப்பட்ட பகுப்பு விதி நீக்கப்படுகின்றது.
     
  2. 2020 முதல் யேர்மன், அவுஸ்திரியா மற்றும் பிரான்ஸ் நாட்டுடனான சுவிசின் எல்லைகள் கொறொனாவிற்கு முன்னர் இருந்ததுபோல் வழமைக்குத் திருப்பும். இப்போது உள்ள எல்லைச் சோதனைகள்தளர்த்தப்படும்.
  3.  
  4. இத்தாலி நாட்டுடனான சுவிசின் எல்லை
  5.  
  6. 2020 முதல் இத்தாலி நாடு தமது எல்லைச்சோதனையினை இத்தாலியின் எல்லை நாடுகளுடன் தளர்த்த பொது வேண்டுகோள் விடுத்துள்ளது. இக்காலம் சுவிஸ் அரசின் பார்வையில் குறுகியதாக இருப்பதாக ஊடக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கிழமை இது தொடர்பில் பேசப்பட்டு, அனைத்து எல்லை நாடுகளுடன் தொடர்பாடப்பட்டு உரிய முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  7.  
  8. 2020 வியாழக்கிழமை காலை மீளவும் ஊடகசந்திப்பு உண்டு.
  9.  
  10. கொறோனா அனுமதித்தால் (நோய்த்தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருந்தால்) தொடர்ந்தும் மேலும் இயல்பு வாழ்வு சுவிசிற்கு மீளத்திரும்பும்.
  11.  
  12. தொகுப்பு: சிவமகிழி
பகிர்ந்துகொள்ள