சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டி இன்று, 21.05.2023 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாடு தழுவிய வகையில் நடைபெற்றது. 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் 5 முதல் 19 வயதுப்பிரிவுகளினைச் சேர்ந்த 914 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். கடந்த ஆண்டு பங்குபற்றியவர்களைவிட இவ்வாண்டு 198 மாணவர்கள் கூடுதலாகக் கலந்துகொண்டனர். இப்போட்டியில் அக்கறையுடன் பங்குபற்றிய அனைத்து மாணவர்களையும் வாழ்த்துகிறோம். இவர்கள் அனைவரும் வரைதல்துறையில் தொடர்ந்து முன்னேறிச் சிறப்புப்பெறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இம்மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் பெற்றோர்களையும் முதல்வர்கள், ஆசிரியர்களையும் பாராட்டுகிறோம். இப்போட்டி சிறப்பாக நடைபெறுவதற்காகப் பணியாற்றிய கல்விச்சேவையின் தேர்வுப்பொறுப்பாளர், மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், பழையமாணவர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப் போட்டியின் முடிவுகளினை 14.06.2023 புதன்கிழமை பள்ளிமுதல்வர்கள் ஊடாக அல்லது கல்விச்சேவையின் இணையத்தளத்தில் பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் 02.09.2023 ஆம் நாள் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ் விழாவில் வைத்து வழங்கப்பெறும்.











