சுவிசில் சுகாதார அமைச்சர் அலான் பெர்சே 2020ம் ஆண்டு நிறைவடையும்போது இருந்ததுபோல் ஆண்டுத் தொடக்கம் தொடர்ந்து நன்றாக இல்லை எனலாம். நோய்த் தொற்று நாம் எதிர்பார்த்த கட்டுப்பாட்டுக்குள் அமையவில்லை என்றார்.
உருமாறிய புதிய மகுடநுண்ணியின் பாதிப்பு பழைய நுண்ணியைவிட அதிகமாக இல்லை எனினும் அதுபரவும் வேகம் அதிமாக உள்ளது எமக்கு கவலை அளிக்கின்றது.
ஆகவே நாம் அறிவித்த நடைமுறைகளை மேலும் 5கிழமைகளுக்கு நீடிக்கும் முடிவிற்கு வந்துள்ளோம். இதன்படி பெப்ரவரி 2021 வரை தற்போதைய நடவடிக்கைகள் தொடரும் என்றார். அனைத்து மாநிலங்களுடனும் கலந்துபேசி 13. 01. 2021 எமது நடவடிக்கைகளை தெரிவிப்போம் என்றார் சுகாதர அமைச்சர்.
தற்போதைய நிலையில் சுவிஸ் முழுவதும் எதிர்பார்த்தளவு தொற்றின் தொகை குறையவில்லை. ஆகவே 18. 12. 2020 அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளை 22. 01. 2021 தாண்டியும் தொடர வேண்டி உள்ளது, உணவகங்கள், பண்பாட்டு, விளையாட்டு, பொதுழுதுபோக்கு நிலையங்கள் தொடர்ந்து பெப்ரவரி 2021 வரை பூட்டியிருக்க வேண்டும்
இப்போது சுவிஸ் எடுக்கவுள்ள முடிவுகளும் தற்போதைய சூழலிற்கு பொருத்தமானதா இருக்க வேண்டும். இப்போது சுவிஸ் எடுக்கும் முடிவு பிரித்தானியா எதிர்கொள்ளும் சூழலை சுவிஸ் எதிர்கொள்ளாது காக்கும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் திரு. பெர்சே தெரிவித்தார்.
சுவிஸ் இதுவரை எடுத்த முடிவுகள் நிலவும் சூழலிற்கு ஏற்ப எட்டப்பட்டதாகும். அரசின் நடவடிக்கை மக்களைப் பாதிக்காது நோய்ப் பரவலைத் தடுப்பதாக அமைய வேண்டும். நாம் மிகுந்த கடுமையான நடவடிக்கைகளை அறிவித்து அதுதொடர்பில் வாதங்கள் மட்டும் நடைபெறுவது யாருக்கும் நலமில்லை. ஆகவே சூழலிற்கு ஏற்ப முடிவுகள் எட்டப்படுகின்றது என்றார்.
நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் மாநிலங்களில் இவ்விதிகளை தளர்த்தினால் அண்டைய மாநிலத்தில் இருந்து தளர்த்தப்பட்ட மாநிலத்திற்குள் மக்கள் சுற்றுலாப்பயணிகளாகப் புறப்படுவதைத் தடுப்பதற்கு சுவிற்சர்லாந்து நாடு முழுவதும் ஒரே விதி ஒழுகப்படுவதாகவும், 09. 01. 2021 முதல் மகுடநுண்ணி நோய்தடுப்பு தனிவகை சூழல் சட்டம் அமுலுக்குவருகிறது.
கடந்த நாட்களில் சுவிஸ் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் மக்கள் அதனால் அடையும் சோர்வையும் நாமும் உணர்கின்றோம். நாங்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தும் 3வது ஒரு நோய்ப்பரவு அலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆகும். அனைத்து தரப்பினர்களுக்கும் பொருத்தமான பொது வழியை நாம் தேடிப் பயணிக்கின்றோம். மக்களின் ஒற்றுமையும் புரிந்துணர்வும் இப்பணிகளுக்கு மிகத் தேவையாகும் என்றார் சுகாதார அமைச்சர்.
சுவிற்சர்லாந்து அரசு முற்பதிவு செய்த 15 மில்லியன் தடுப்பூசிகள் சுவிஸ் நோக்கி வந்துள்ளது. நாம் கோடை காலத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி இட்டுவிடுவோம் என நம்புகின்றோம்
உணவகங்கள் பெப்ரவரி 2021 வரை மூடப்பட்டிருக்கும். மேலதிக முடிவு 13. 01. 2021 எடுக்கப்படும்.
அதுபோல் அனைத்து பண்பாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிலையங்களும் பூட்டப்பட்டிருக்கும்.
அனைத்துக் கடைகளும் இரவு 19.00 மணிமுதல் காலை 06.00 மணிவரை பூட்டப்பட்டிருக்கும்.
பனிச் சறுக்கும் திடல்கள் தொடர்பான முடிவுகளை தொடர்ந்தும் மாநில அரசுகளே தீர்மானிக்கும்
06.01.2021 கணக்கின்படி 4808 புதிய மகுடநுண்ணித் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளது. 65 இறப்புக்கள் 24 மணிநேரத்தில் நடந்திருக்கின்றன.