கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் ஊழியர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திரிபுபடுத்தப்பட்ட பொய்யான சாட்சியங்களை அளித்தார் என்ற குற்றச்சாட்டில், அவரைக் கைது செய்யுமாறு குற்ற விசாரணைத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் இன்று மாலை அறிவுறுத்தினார்.
சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அங்கொட மனநல வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கினார்.
அதன்படி, அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.