சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த மதப் போதகருடன் 150 தொடக்கம் 180 பேர் நெருக்கமான தொடர்பாடலைக் கொண்டிருந்துள்ளனர் என்று சிறீலங்காவின் இராணுவத் தளபதியும் கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இனபடுகொலையாளியுமான லெப்டினன்ட் ஜெனர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்பியா தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஆராதனை இடம்பெற்றுள்ளது. இந்த ஆராதனையை சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த போதகர் நடத்தியுள்ளார். சுவிஸூக்கு திரும்பிய நிலையில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அவரைச் சந்தித்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத் தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட போதகருடன் 150 தொடக்கம் 180 பேர் நெருக்கமான தொடர்பைப் பேணியுள்ளனர். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை சிறீலங்காவில்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நான்கு பேருக்கு இன்று வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.