சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக பணியை ஆரம்பித்துள்ளார். மூன்றாண்டுகள் கழிந்த நிலையில் அதில் முதல் தலைமை ஊழியராக (Chef de cabin) M/C EU முன்னேறி சான்றிதழுடன் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
அதன்படி சுவிட்சர்லாந்தின் விமானப் பணித்துறையின் தலைமை ஊழியராக இணைந்த ஈழத்தமிழன் என்ற பெருமையை சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தைச் சேர்ந்த சுருதன் கந்தையா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.