சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்: இராணுவ தாக்குதலில் 200 பேர் பலி!

You are currently viewing சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்: இராணுவ தாக்குதலில் 200 பேர் பலி!

breaking

சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை இராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது.

இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உள்பட 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, சூடானின் தெற்கு பகுதியின் அல்-கடாரிஸ், அல்-கேல்லவட் கிராமத்தில் துணை இராணுவப் படையினர் பதுங்கி இருந்து செயல்படுவதாக அந்நாட்டின் ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இதனால் இராணுவத்தினர் அங்கு களமிறக்கப்பட்டனர். தொடர்ந்து ரொக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 3 நாளாக நீடித்து வரும் இந்தத் தாக்குதலில் தற்போதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply