சூடானில் ஒரே புதைகுழியில் இருந்து 87 சடலங்கள் மீட்பு !

You are currently viewing சூடானில் ஒரே புதைகுழியில் இருந்து 87 சடலங்கள் மீட்பு !

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்தினருக்கும் பி.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவ படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி இது தீவிரம் அடைந்தது. இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில் சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில் 87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனை வெகுஜன படுகொலை என ஐ.நா. சபை கூறி உள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply