சூடானில் போர் ஒருபக்கம் ; மர்ம நோயால் 73 பேர் உயிரிழப்பு !

You are currently viewing சூடானில் போர் ஒருபக்கம் ; மர்ம நோயால் 73 பேர் உயிரிழப்பு !

சூடான் நாட்டில் உள்ள அல்-ஹிலாலியா நகரில் 73 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியானது துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளால் முற்றுகையிடப்பட்டதாக சூடான் மருத்துவர்கள் சங்கம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

RSF உயர்மட்ட தளபதி ஒருவர் இராணுவத்திற்கு மாறியதிலிருந்து கிழக்கு எல் கெசிரா மாகாணத்தில் தாக்குதலுக்கு உள்ளான டசின் கணக்கான கிராமங்களில் இதுவும் ஒன்று.

இதனையடுத்து ஏற்பட்ட பழி வாங்கும் தாக்குதல்களால் 135,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இரு படைகளுக்கும் இடையிலான போரானது உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

மட்டுமின்றி 11 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதுவரை இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையே, RSF ஷெல் மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக கெசிராவின் பிற பகுதிகளில் அதிக இறப்பு எண்ணிக்கை ஏற்பட்டது.

ஹிலாலியாவில் உள்ள மக்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர், அப்பகுதியைச் சேர்ந்தவர்களின் கருத்தின் அடிப்படையில் உள்ளூர் மருத்துவமனை கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

இணைய சேவை முடக்கபப்ட்டுள்ளதால், மர்ம நோய் குறித்த காரணங்கள் உறுதி செய்ய முடியாமல் உள்ளது. தமது குடும்பத்தில் மூவர் மர்ம நோயால் இறந்துள்ளதாக கூறும் ஒருவர், இணைய சேவை செயல்பாட்டில் உள்ள பகுதிக்கு தப்பிச் சென்ற பின்னர் தான் குடும்பத்தினரின் இறப்புக்கு காரணம் தெரிய வந்ததாக தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply