சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஏராளக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவின் சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நீண்ட காலமாக தொடர்ந்து வரும் அதிகார போராட்டம், நாட்டின் அமைதி மற்றும் பொது மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது.
இவ்விரு தரப்பினருக்கும் இடையேயான மோதல்கள் காரணமாக ஏற்படும் மனிதநேய நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த உள்நாட்டுப் போரின் கொடூரத்தை எடுத்துக்காட்டும் வகையில், சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள எல்-பஷாரில் செயல்பட்டு வந்த ஒரு மருத்துவமனை ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் 67 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒரு மருத்துவமனை போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய இடத்தை தாக்குவது மனிதநேயத்திற்கு எதிரான செயலாகும்.
இந்த கொடூர செயலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அத்துடன் மனிதாபிமான உதவிகளை வழங்கும் மருத்துவமனைகளைத் தாக்குவது போர் குற்றமாகும் என்று பல நாடுகள் தெரிவித்துள்ளன.