சூடான் உள்நாட்டுப் போர்: 330 சிறுவர்கள் உட்பட 2000 பேர் உயிரிழப்பு!

You are currently viewing சூடான் உள்நாட்டுப் போர்: 330 சிறுவர்கள் உட்பட 2000 பேர் உயிரிழப்பு!

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கு இடையே நடைபெற்று வரும் மோதலில் 330க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பதாக ஐ.நாவின் யுனிசெப் தெரிவித்துள்ளது. சூடானில் அப்தெல் ஃபட்டா அல்-புர்ஹான் தலைமையிலான ராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான துணை ராணுவத்திற்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் 15 திகதி முதல் அதிகார சண்டை நடந்து வருகிறது.

சூடான் தலைநகர் கார்டூமில் நடைபெற்று வரும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை சுமார் 2000 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாகவும் அறிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கு இடையே நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 330க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ஐ.நாவின் குழந்தைகள் நலப் பிரிவான யுனிசெஃப் அமைப்பின் பிரதிநிதி மன்தீப் ஓ’பிரையன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் காயமடைந்து இருப்பதுடன், பலர் வீடுகளை விட்டு வெளியேறி தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் உடனடியாக கிட்டத்தட்ட 1.3 கோடி சிறுவர்களுக்கு உதவிகள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply