நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறையால் சூடான் நகரம் ஒன்றில் 800,000 மக்கள் மிக மிக ஆபத்தான நிலையில் சிக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சூடானில் ஒரு வருடத்திற்கு முன்பு சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கு இடையே போர் வெடித்தது. இதனால் உலகின் மிகப்பெரிய இடம்பெயர்தல் உருவானது.
இந்த நிலையில் இரு தரப்பினருக்குமான போர் தற்போது El Fasher பகுதியை நெருங்கியுள்ளதாக 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலிடம் ஐ.நா. அரசியல் விவகாரத் தலைவர் Rosemary வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
வடக்கு டார்பூரின் தலைநகரமாகும் இந்த El Fasher பகுதி. El Fasher பகுதியில் முன்னெடுக்கும் மோதலானது டார்ஃபர் முழுவதும் இனங்களுக்கிடையேயான இரத்தக்களரி சண்டையை கட்டவிழ்த்துவிடலாம் என்றே Rosemary எச்சரித்துள்ளார்.
ஐ.நா மன்றம் வெளியிட்டுள்ள தகவலில், சுமார் 25 மில்லியன் மக்கள் உதவிகள் கோரும் நிலையில் உள்ளனர் என்றும், சுமார் 8 மில்லியன் மக்கள் தங்கள் குடியிருப்புகளை துறந்து வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது El Fasher பகுதியில் குடியிருக்கும் 800,000 மக்களின் நிலை மிகவும் ஆபத்தில் உள்ளது என்றும், டார்ஃபர் முழுவதும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.