கொரோனா தொற்றின் கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக, நோர்வேயின் எல்லையில் இன்று 8 மணி முதல் கடுமையான தனிப்பட்ட கட்டுப்பாடு உள்ளது.
செங்கன் எல்லையில் தற்காலிக எல்லைக் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நோர்வே வந்து சேரும் மக்களிடமிருந்து தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதே இதன் குறிக்கோள்.
இதன் பொருள் அனைவரும் கடவுட்சீட்டு அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை சோதனைகளின்போது அதிகாரிகளுக்கு காட்டவேண்டும்.
நோர்வேக்குச் செல்லும் அல்லது வரும் அனைவருக்கும் இக்கட்டுப்பாடானது பொருந்தும், இப்போது அனைவரும் சரியான அடையாளத்தைக் காட்ட வேண்டும்.என்பது குறிப்பிடத்தக்கது.