ஆப்பிரிக்காவில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் ஐரோப்பாவுக்குள் அதிகதிகளாக நுழைகின்றனர். கடல் வழியாக ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்குள் நுழையும் முயற்சியில் பலர் தோல்வியடைந்து உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இதனிடையே, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு செனகல். ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் சிலர் செனகல் கடல் வழியாக படகில் ஐரோப்பாவுக்குள் செல்ல முயற்சித்தனர்.
இந்நிலையில், அகதிகள் சென்ற படகு கடந்த திங்கட்கிழமை கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும், படகில் பயணித்தவர்கள் எத்தனைபேர் என்ற விவரம் இதுவரை தெரியாததால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.