தமிழகத்தில் நேற்று மே 24-ம் தேதி உறுதி செய்யப்பட்ட 765 தொற்றுகளில், 587 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதுவரை சென்னையில் மொத்தம் பாதித்துள்ள 10,576 பேரில், 4781 பேர் குணமடைந்துள்ளனர். 77 பேர் உயிரிழந்துள்ளனர். ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டையை தொடர்ந்து தண்டையார்பேட்டையிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சென்னையில், நேற்று அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 101 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 70 பேரும், கோடம்பாக்கம் 69 பேரும், தேனாம்பேட்டை 64 பேரும், திரு.வி.க.நகரில் 55 பேரும், அடையாறு 46 பேரும், அண்ணாநகரில் 38 பேரும், அம்பத்தூரில் 31 பேரும், திருவொற்றியூரில் 26 பேரும், வளசரவாக்கத்தில் 24 பேரும், மாதவரத்தில் 10 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பெருங்குடியில் 16 பேரும், மணலியில் 16 பேரும், ஆலந்தூரில் 14 பேரும், சோழிங்கநல்லூரில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒட்டுமொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையின் பங்கு 72 விழுக்காடாகவும், ஒட்டுமொத்த இறப்பில் சென்னையில் இறந்தவர்களின் பங்கு 70.3 விழுக்காடாகவும் உள்ளது.
சென்னையில் 60.02 விழுக்காடு ஆண்கள், 39.96 விழுக்காடு பெண்களும், திருநங்கை மூன்று பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆண்களில் 30-39 வயதுக்கு உட்பட்ட 1,421 பேரும், 20-29 வயதுக்கு உட்பட்ட 1,362 பேரும் பாதிக்கபட்டுள்ளனர். அதேபோல், பெண்களில் 20-29 வயதுக்கு உட்பட்ட 919 பேரும், 30-39 வயதுக்கு உட்பட்ட 862 பேரும் பாதிக்கபட்டுள்ளனர் .