ஐரோப்பாவின் மிகபெரிய விமான சேவை நிறுவனமான, ஜேர்மனியின் “Luftansa” நிறுவனம், தனது 95 சதவீதமான பறப்புக்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
“கொரோனா” பாதிப்பால், உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகளால், உலகளாவிய ரீதியில் தமது பறப்புக்களை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையிலும், பொருளாதார இழப்புக்களினாலும் இந்த முடிவை எடுக்கவேண்டியுள்ளதாகவும் மேற்படி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்நிறுவனத்தின் 763 விமானங்களில், 700 விமானங்கள் எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் நாள்வரை தரிப்பிடங்களிலேயே நிறுத்தி வைக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.