சைப்ரஸ் நாட்டில் விஞ்ஞானிகள் டெல்டா மற்றும் ஓமிக்ரான் மாறுபாடுகளை ஒத்த அறிகுறிகளை கொண்ட 25 நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளனர். இந்த புதிய மாறுபாடானது டெல்டா வகையின் மரபணு பின்னணியை ஒத்தும், ஒமைக்ரானின் சில திரிபுகளையும் கொண்டுள்ளது என சைப்ரஸ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் பேராசிரியர் Leonidos Kostrikis தெரிவித்துள்ளார்.
இதுவரை 25 நோயாளிகளில் புதிய Deltacron மாறுபாடு கண்டறியப்பட்டாலும், இதன் தாக்கம் தொடர்பில் இப்போது கணிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டவர்களில் 11 பேர் ஏற்கனவே கொரோனா நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் எனவும் எஞ்சிய 14 பேர் பொது மக்களில் சிலர் எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம், மாடர்னாவின் தலைவர் ஒரு கலப்பின கொரோனா மாறுபாடு தொடர்பில் எச்சரித்திருந்தார், தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளதை விட மோசமாக இருக்கும் என்றும் அவர் அப்போது அச்சம் தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, டெல்டா மற்றும் ஓமிக்ரான் பாதுப்பு எண்ணிக்கை நாளும் அதிகரித்தே வந்துள்ள நிலையில், இதனால் இன்னொரு புதிய மாறுபாடு உருவாகும் என்றே மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.