வாக்னர் கூலிப்படையினர் தமது சொந்த வீரர்களை படுகொலை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடின் அரசாங்கத்திற்கு எதிராக வாக்னர் கூலிப்படையின் ஆயுத கிளர்ச்சியை ஆதரிக்காத சொந்த வீரர்களை படுகொலை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் மாஸ்கோவை கைப்பற்றும் நோக்கில் வாக்னர் கூலிப்படையினர் பயன்படுத்திய அதே பாதையில் தற்போது சடலங்கள் மீட்கபட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும், அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.