கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இங்கு அல்கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப், ஐஎஸ் போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே அமெரிக்க ராணுவமும், சோமாலிய பாதுகாப்புப்படையினருடன் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், சோமாலியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேவேளை, அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றபின் ஆப்பிரிக்காவில் அமெரிக்கா நடத்தும் முதல் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.