நம்பிக்கையில்லாப் பிரேரணையும், ஜனாதிபதிக்கு எதிரான தீர்மானமும் ஜனநாயகத்தை நிலைநாட்ட கொண்டு வரப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஜனநாயகத்திற்காக இளைஞர்கள் வீதியில் இறங்கியுள்ளதாகவும், அவர்களின் போராட்டத்தை அரசாங்கம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் இராணுவத்தினரை பாதுக்கப்பதாக கூறினாலும் யுத்தத்தில் வெற்றிபெற்ற பொன்சேகா உள்ளிட்டவர்களை பழிவாங்கியது யார் என்பது அனைவரும் அறிந்ததே என்றும் அவர் கூறினார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை, குற்றப் பிரேரணை, 19ஆவது திருத்தத்தை கொண்டுவந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது போன்ற தீர்மானத்தை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடிக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட வேண்டுமெனவும், பொருளாதார யுத்தத்தை ஆயுதங்களால் வெல்லக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.