ஜப்பானிய தீவின் அருகே தென் கொரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று சென்றபோது திடீரென கடலில் மூழ்கியுள்ளது.
இதனால் குறித்த கப்பலில் இருந்த ஊழியர்கள் கடலில் குதித்துள்ளனர்.
இது தொடர்பில் தகவலறிந்த ஜப்பான் கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது, கடலில் தத்தளித்த 4 ஊழியர்கள் மீட்கப்பட்டதாகவும், 7 பேரை காணவில்லை எனவும் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கப்பலில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 பேர், தென் கொரியாவைச் சேர்ந்த 2 பேர், சீனாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 11 ஊழியர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.