ஜப்பானை அதிரவைத்த கடத்தல் நாடகம்! அவமானத்தால் கொதிக்கும் ஜப்பான்!!

You are currently viewing ஜப்பானை அதிரவைத்த கடத்தல் நாடகம்! அவமானத்தால் கொதிக்கும் ஜப்பான்!!


ஜப்பானில்
 வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த «Nissan» மோட்டார் நிறுவனத்தின் முன்னாள்இயக்குனர் «Carlos Ghosns» சினிமா பாணியில் ஜப்பானிலிருந்து கடத்தப்பட்டு லெபனானுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

சுமார் இருபது வருடங்களாகஜப்பானின் பிரபலமான மோட்டார் வாகன நிறுவனமான «Nissan» நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய இவர்சர்ச்சைக்குரிய விதத்தில் «Nissan» நிறுவனத்தின் கணக்குகளிலிருந்து பணப்பரிவர்த்தனை செய்ததாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் «Tokyo» விமானநிலையத்தில் வைத்து கைது  செய்யப்பட்டிருந்தார்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையோடுபிணையில் விடுவிக்கப்பட்ட «Carlos», ஜப்பானிய அதிகாரிகளின் 24 மணிநேர கண்காணிப்போடு இருந்ததாகவும்அவரது ஒவ்வொரு அசைவுகளும் கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும்அவரதுவீட்டை 24 மணிநேரமும் சூழ்ந்திருந்த ஊடகவியலாளர்கள் அவரது நடவடிக்கைகளை பதிவுசெய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் «Carlos» மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில்நத்தார்கால விடுமுறை நாட்களை பயன்படுத்திகடத்தல்  நாடகமொன்றை அரங்கேற்றிய «Carlos» கடந்த 24.12.2019 அன்று ஜப்பானிலிருந்து தப்பிச்சென்று தனது பூர்வீகநாடான லெபனானை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நத்தார் புனித நாளை முன்னிட்டுதேவாலயங்களில் இசை விருந்தளிக்கும் பாரம்பரிய இசைக்குழுஎன்ற போர்வையில்இராணுவப்பயிற்சி பெற்ற «கமாண்டோ வீரர்கள்» அடங்கிய குழுவொன்றை யாருக்கும் சந்தேகம் வராதபடி தனது வீட்டிற்கு «Carlos» வரவழைத்தார்.

«Carlos» வீட்டில் இசை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டஇசைக்கலைஞர்களாக வேடமிட்டிருந்த«கமாண்டோ» வீரர்கள்இசைக்கருவிகளை காவிச்செல்லும் கொள்கலனில் «Carlos»  மறைத்துவைத்து எடுத்துச்சென்றிருக்கிறார்கள்.

பிரான்ஸ்பிரேஸில்லெபனான் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த «Carlos» ஜப்பானை விட்டு வெளியேறியதும் மிக இலகுவாக லெபனானை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதே நேரத்தில்பிரான்ஸ் நாட்டு கடவுச்சீட்டையும்லெபனான் நாட்டுஅடையாள அட்டையையும் பாவித்து லெபனானுக்குள் நுழைந்த «Carlos» சட்டபூர்வமானமுறையிலேயே லெபனானுக்குள் வந்திருப்பதாக லெபனான் தெரிவித்துள்ளது.

லெபனான் நாட்டோடு எவ்விதமான கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையையும் கொண்டிருக்காத ஜப்பான் இப்போது பெரும் சிக்கலுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுகடும் காவலில்வைக்கப்பட்ட «Carlos» தமது கண்களில் மண்ணைத்தூவிவிட்டு தப்பிச்சென்றமை ஜப்பானுக்குபெருத்த அவமானமாகவும் மாறியுள்ளது.

ஜப்பானிலிருந்து «Carlos» எப்படி தப்பினார் என்பதை இன்னும் கிரகிக்க முடியாதுள்ளதாக வெளிப்படையாகவே தெரிவித்திருக்கும் ஜப்பான்இக்கடத்தல் நாடகத்தில் வெளிநாட்டு சக்திகள் நிச்சயமாக இருக்கும் என நம்புகிறது

«Carlos» இன் லெபனானிய மனைவியால் மிக கனகச்சிதமாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதாக நம்பப்படும் இக்கடத்தல் நாடகத்தில், «Carlos» இன் லெபனானிய வழக்கறிஞருக்கும்அமெரிக்க உளவாளி ஒருவருக்கும் பிரதான பங்கிருப்பதாகவும்தெரிவிக்கப்படுகிறதுஇந்த நிலையில்ஜப்பானிலிருக்கும் லெபனான் தூதரகத்திற்கும் இக்கடத்தலில் பங்கிருப்பதாக நம்பப்படுகிறது.

லெபனானுக்கு தப்பிவந்தபின் முதல்முறையாக கருத்து தெரிவித்த «Carlos», தன்மீதுபொய்க்குற்றச்சாட்டுக்களை ஜப்பான் சோடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

«Nissan»நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக தான் பொறுப்பு வகித்த காலத்தில்பிரான்சின்«Renault» மோட்டார் திறுவனத்தை «Nissan» நிறுவனத்தோடு இணைக்கும் ஜப்பானின் முயற்சிகளுக்கு தான் இணங்கவில்லை என்ற காரணத்திற்காகவே ஜப்பான் தன்மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்திதன்னை பழிவாங்க முயற்சிப்பதாக «Carlos» தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய நீதித்துறைமீது தனக்கு நம்பிக்கை இல்லை எனத்தெரிவித்திருக்கும் அவர்இனவாதஅடிப்படையிலேய தன்மீதான விசாரணைகளை ஜப்பான் மேற்கொள்ளும் என்றும்அதனால் நீதியான விசாரணையை ஜப்பானில் எதிர்பார்க்க முடியாதெனவும் தெரிவித்துள்ள «Carlos», தனது லெபனானிய மனைவியோடு எவ்விதமான தொடர்புகளையும் மேற்கொள்ள அனுமதிக்காத ஜப்பான் தன்னை ஒரு பணயக்கைதி போலவே நடாத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரபலமான மோட்டார் நிறுவனங்களான «Nissan / Mitsubishi / Renault» ஆகியவற்றின்தலைமைப்பொறுப்புக்களை ஒரே நேரத்தில் வகித்த «Carlos», பொருளாதாரக்குற்றங்கள்சாட்டப்பட்டு 2018 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டபோதுபெரும் அதிர்வலைகளை ஏற்பட்டுத்திய இவ்விடயம்இப்போது «Carlos» ஜப்பானை விட்டு அதிரடியான முறையில் தப்பிச்சென்றிருப்பதால் மீண்டும் உலகத்தின் கவனத்தை பெற்றுள்ளதோடு ஜப்பானுக்கு மிகுந்தஅவமானத்தையும் தந்திருக்கிறது.

பகிர்ந்துகொள்ள