வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அணிந்திருந்த ஜாக்கெட்டில் படிந்திருந்த தூசியை கவனிக்காமல் விட்டதாக கூறி பாதுகாவலருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கடந்த வாரம் ஏவுகணை சோதனை ஒன்றை முன்னெடுக்கும் பொருட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சென்றிருந்தார். அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டில் வெள்ளை நிறத்தில் தூசு படிந்திருந்தது.
தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதுடன், அவரது பாதுகாவலர் மரண தண்டனையை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த சம்பவத்திற்கு தொடர்புடைய நபர் கடுமையான தண்டனைக்கு விதிக்கப்படலாம் அல்லது பதவியை பறிக்கலாம் என்றே வடகொரியா தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் அவரை கோபப்படுத்தியிருந்தால், கண்டிப்பாக மரண தண்டனை தான், அதில் மாற்றுக்கருத்து இருக்காது என்றார். கிம் ஜோங் தந்தை ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள நபர், சிலர் சிறைக்கு சென்றுள்ளனர், சிலர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும், தூசு படிந்த விவகாரத்தில் கிம் ஜோங் உன் மன்னிப்பு வழங்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.