ஜாட்’ படத்தை தடை செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டம் !!

You are currently viewing ஜாட்’ படத்தை தடை செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டம் !!

தமிழர்களின் ஏக பிரதிநிதிகளான  தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய  விடுதலை போராட்டத்தை  இழிவுபடுத்தும் வகையில் வெளியீடு செய்யப்பட்ட மெட்ராஸ் காபே   ,   பேமிலி மேன் ,புலிப்பார்வை  வரிசையில்    ஜாட்   என்ற  திரைப்படம்    ஏப்ரல் 10  திகதி அன்று  இந்தியாவில்  தெலுங்கு பட இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயகத்தில்  வெளியீடு செய்யப்பட்டது .

வட இந்தியாவில் அயோத்தி அருகே நடக்கும் கதைக்களத்தில், கதைக்கு சிறிதும் தொடர்பின்றி  தமிழீழம் யாழ்ப்பாணப் புலிப்படை என்று உள்நோக்கத்துடன் பெயர்வைத்து   தமிழீழ விடுதலைப்  புலிகளின்  போராட்டம் தவறானது போலவும், அதன் தளபதிகள் கொடூர வில்லன்கள் போலவும் கட்டமைப்பதை    கண்டித்து  தமிழ்நாடு முழுவதும்      இப்படம் திரையீடு செய்யும்  திரையரங்கு முன்பு இந்த தமிழின விரோதப் படத்தை    திரையிட அனுமதிக்க   கூடாது  என்று சொல்லி நாம்   தமிழர் கட்சியினர் போராட்டம்  நடத்தியிருந்தனர் .

இது போன்ற படங்கள்   இனிவரும்  காலங்களில் திரையீடு செய்ய முடியாத வகையில்   எமது    தொப்புள் கொடி உறவுகளான  தமிழ்நாடு மக்களும்   .  ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் ஒவ்வொரு தேசிய இன  மக்களும்    ஒன்றிணைந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தமிழினத்திற்கு எதிராக இந்திய அரசினால் முன்னெடுக்கப்படும்  சதிகளை முறியடிக்க   தமிழக உறவுகள்  ஓரணியில் திரண்டு   கட்சி  வேறுபாடுகள் கடந்தது தமிழினம்   என்கின்ற ஒரு குடையில் அணித்திரண்டு போராட  வேண்டும் .

பகிர்ந்துகொள்ள

Leave a Reply