ஜெனீவாவில் 22 வது ஏரி அணிவகுப்பு மற்றும் Lake Sensation நிகழ்வுகளில் 100,000 க்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கோடை கால நிகழ்வுகளும் கடந்த சனிக்கிழமை ஜெனீவாவில் இடம்பெற்றன.
இரண்டு நிகழ்ச்சிகளிலும் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
பொலிஸ் மதிப்பீடுகளின்படி, சனிக்கிழமை பிற்பகல் துறைமுகப் படுகையைச் சுற்றி நடந்த அணிவகுப்பில் சுமார் 70,000 பேர் பங்கேற்றனர்.
மேலும் 30,000 பேர் விருந்து நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் அமைப்பாளரான கிறிஸ்டியன் குப்பெர்ஸ்மிட் இதில் பங்கேற்றவர்கள் குறித்து திருப்தி வெளியிட்டார்.
மதியம் 85,000 பங்கேற்பாளர்களும், மாலையில் 35,000 பேரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் என்று அவர் கூறினார்.